அ.யேசுராசா

வாசல்

இலக்கிய உலகில் காணப்படுகிற சீர்கேடுகள் பலவற்றுக்கு அறம் சார்ந்த நிலைப்பாடின்மையே காரணம் எனக் கருதுகிறேன்ள; மதிப்பீடுகள், பரிசளிப்புகள், விருதுகள் வழங்கல், குணநலனைக் கொச்சைப்படுத்தல் போன்றவற்றில் இது வெளிப்படுகின்றது. அண்மைய நேர்காணலொன்றில் கே. எஸ். சிவகுமாரன் நியாயமான ஆதங்கத்துடன் குறிப்பிடும் 'கண்டுகொள்ளாமை', 'கள்ள மௌனம்' போன்றவற்றுக்கும் இதுதான் காரணம். மூத்த தலைமுறையினரைப் போலவே புதிய தலைமுறையினரிடமும் அறம்சார்ந்த நிலைப்பாடின்மையைப் பரவலாய்க் காணமுடிகிறது.

குறுகிய காலத்தில் - விரைந்து முக்கியமானவராய்த் தம்மைக் 'காட்சிப்படுத்துவதே' ஒரே நோக்காகவுள்ளது; மூத்தவர்களுடனான இவர்களது தொடர்புகள் இந்த 'இலக்கை'க் கொண்டதே. நுகர்வுக் கலாசாரச் சூழல் 'பயன்பாட்;டுக்கு' மட்டும் உரியவர்களாக மூத்த – அனுபவசாலிகளைப் பயன்படுத்தப்பார்க்கிறது. உரையாடல்களின் மூலம் குறுகிய காலத்தில் நிரம்பிய தகவல்களையும், முக்கிய விடயங்களில் மதிப்பீட்டுக் கருத்துகளையும் திரட்டுகின்றனர்; அரிய இதழ்கள், நூல்கள் போன்றவற்றையும் தொடர்பு காரணமாகப் பெற்றுக்கொள்கின்றனர். அக்காலங்களில் மதிப்புக் கொடுப்பவர் போல் 'அமைதியாக' இருக்கின்றனர்; பயனைப் பெற்றுக்கொள்கின்றனர்; பெரும்பாலும் மாற்றுக் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதில்லை.

ஆனால், கொஞ்சக்காலம் சென்றபின்னர் திடீரென 'பிஞ்சில் பழுத்தவர்களாய்' – ஒருவித 'உயர்வுசசிக்கல்' கொண்டவர்களாய் மாறித் தோன்றுகின்றனர இவ்வேளை சிறிய நன்றி உணர்வுகூட இவர்களிடம் இருப்பதில்லை. 'அவர் அந்தக்காலத்தில் ( கருத்துநிலையில்) செத்துப்போனவர ;ளூ செத்துப்போனவரைப் பற்றி இப்போது கதைக்கத் தேவையில்லை' என (இப்போது வாழ்ந்துகொண்டிருப்பவரையே), தமது சுண்டுவிரலால் தட்டிவிடும் 'மேதாவிகளாக' உள்ளனர். இவ்வாறே, 'அவருக்கு ஒன்றும் தெரியாது' என்றோ, 'அவர் இலக்கிய உலகில் தொலைந்துபோய் பல வருடங்களாகிவிட்டன' என்றோ, 'அவருடன் கதைத்துப் பயனில்லைளூ எப்போதும் முன்முடிவுகளுடன் இருப்பவர் அவர்' என்றோ, இன்னும் மேலே போய், 'மன நோயாளி' என்றோ சொல்வார்கள்ளூ ஏதாவது வலைத்தளத்தை ஆரம்பித்து எழுதிப் பிரபல்யமடையவும் முனைவர்.

இவர்களின் படைப்புகள், கருத்துகள், எழுத்துநடையிலுள்ள குறைபாடுகளை – பலவீனங்களை மூத்தவர்கள் வெளிப்படுத்தியிருப்பார்கள்ளூ பாராட்டுகளை மட்டும் எதிர்பார்த்தவர்கள், இதனால் ஏமாற்றமடைந்திருப்பர். கருத்துப் பரிமாற்றம் செய்யவேண்டிய வேளைகளில் (இயலாமை காரணமாய்?) மௌனமாய் அடக்கிவைக்கப்பட்டவை, பின்னர் திடீரெனப் பீறிட்டுக ;;கிளம்புவதாலும் இவர்கள் இவ்வாறு நடந்துகொள்ளலாம்.

தவறுகளை, பலவீனங்களைச் சுட்டிக்காட்டுவதைப் பொதுவில் பலரும் விரும்புவதில்லை ளூ அவர்கள் அசௌகரியப்படுகின்றனர்ளூ தவறுகள் - பலவீனங்கள் எவையெனப் பலர் அறிவதுமில்லை. 2009 இல் 'ஜீவநதி' இரண்டாவது ஆண்டுமலரில், ';பிழை பிழையாய்...பிழை சரியாய்...!' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்ளூ இலக்கியவாதிகள் பலரின் கட்டுரைகளில் காணப்படும் தரவுப் பிழைகள் பலவற்றை ஆதாரங்களுடன் அதில் வெளிப்படுத்தி யுள்ளேன். யோகேஸ்வரி சிவப்பிரகாசம் என்ற எழுத்தாளர் 'ஜீவநதி'க்கு (புரட்டாதி - ஐப்பசி 2009) எழுதிய கடிதத்தில்,

'...தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டுவதாகக் கட்டுரை அமையும்போது இதமாகத் தெரியவில்லை'

என ஆதங்கப்பட்டுள்ளார். செங்கை ஆழியான், கலாநிதி அ. சண்முகதாஸ் போன்ற 'பிரபலங்களின்' தரவுப் பிழைகளையும் அக்கட்டுரையில் நான் குறிப்பிட்டுள்ளமை அந்த எழுத்தாள அம்மணியைச் சங்கடப்படுத்துகிறது போலும்! இப்படியெல்லாம் தவறாக அவர்கள் எழுதுவது அவரைச் சங்கடப்படுத்தவில்லைளூ தவறுகள் திருத்தப்படாவிட்டால் 'உண்மைகளாக' அவை நிலைக்கப்போகும் அவலமும் அவரைச் சங்கடப்படுத்தவில்லைளூ 'சுட்டிக்காட்டுவது' மட்டுந்;தான் சங்கடந்தருகிறது!

எனது நீண்டகால நண்பர் ஒருவருடன் அண்மையில் இலக்கிய விவகாரங்களைப் பற்றிக் கதைக்கையில், 'தான் நல்லவற்றை மட்டுமே பார்ப்பதாக'க் குறிப்பிட்டார்ளூ வேறு 'குளறுபடி களைப்' பற்றி அவருக்கு அக்கறையில்லை. காந்தி விரும்பும் 'குரங்குப் பொம்மை' போல் அவர் இருப்பது எனக்கு ஏமாற்றந்; தருகிறது! 'யதார்த்த விரோதி வெகுஜன விரோதி'ளூ 'மௌனம் கலக நாஸ்தி!'. தவறுகளையோ குளறுபடிகளையோ கண்டுகொள்ளாமல் அல்லது வெளிப்படுத்தாமல் இருப்பதன்மூலம் 'இலக்கியவாதிகள்' எல்லாருடனும் சுமுக உறவு பேணப்படும்ளூ அத்தகைய சுமுக உறவுச் சூழல் பாராட்டு மதிப்பீடுகள், பரிசுகள், விருதுகளுக்கு எத்தகைய இடைஞ்சலையும் தராதுளூ எனவே பாதுகாப்பானது. இவ்வாறான மனநிலை கொண்டவர்களாகவே இலக்கியத்துறையில் பெரும்பாலானோர் உள்ளனர்ளூ எனவேதான், 'கண்டுகொள்ளாமை' அல்லது 'கள்ள மௌனம்' அல்லது 'பூசி மெழுகுதல்கள்'. படைப்புகளில் 'தர வீழ்ச்சி', 'இலக்கிய ஊழல்கள்' என்பவை அதிகரிக்கின்றனவென்றால், இந்தப் 'பச்சத்தண்ணி மனப்பாங்கு' பரவலாகத் தொடர்வதும் முக்கிய காரணியாகும்.

'கலைமுகம்' ஐம்பதாவது இதழில் 'மாலினோஸ்க்னா' எழுதிய கட்டுரையிலுள்ள சில கருத்துகள் பற்றி, 'பயணி' என்ற புனைபெயரில் நான் எழுதிய கடிதம், 'கலைமுகம்' 51 ஆவது இதழில் (ஏப்ரில் - ஜூன ;2011) வந்துள்ளது. புரியாத கவிதைகள், ஒருமை பன்மைத் தவறுகள்பற்றியதாய் எனது கருத்துகள் உள்ளன. அக்கடிதத்துக்குப் பதிலாக, 'யேசுராசாவுக்கு ஓர் எதிர்வினை' என்ற தலைப்பிலான கட்டுரையை 'மறுபாதி' இதழ் ஆசிரியரான சித்தாந்தன், தனது 'தருணம்' வலைப்பூவில் வெளியிட்டுள்ளார்ளூ கேதீஸ் பின்னூட்டமிட்டுள்ளார். முதலில் தலைப்பே தவறாக உள்ளதைச் சுட்டவேண்டும்ளூ அது, 'பயணிக்கு ஓர் எதிர்வினை' என்றுதான் இருக்கவேண்டும் (ஆனால், தனது கவிதைகள் சிலவற்றுக்கும் இவ்வாறுதான் அவர் பிழையான தலைப்புகளை வைத்துள்ளார!; ). 'பயணி' யேசுராசா என்பதைச் சொன்னவர், 'மாலினோஸ்க்னா' யார் என்பதைக் 'கவனமாக'; கட்டுடைக்கவில்லை! ('மறுபாதி' இதழ் துணை ஆசிரியரில் ஒருவ ரான அ. கேதீஸ்வரன்தான் அந்த 'மாலினோஸ்க்னா'!). இருவரது குறிப்புகளிலும், முரண்பாடு களும் முதிர்ச்சியின்மையும் வெளிப்படுகின்றன.

1.) 'அவருக்குத் தெரிந்ததெல்லாம் பிறர் எழுதிய படைப்புகளில் இருக்கும் பிழைகளைக் கண்டுபிடித்து இலக்கியம் நடாத்தும் சிறு பொறிமுறை மட்டுமே.'

'அண்மைக் ;காலமாக? மற்றவர்களின் படைப்புகளின் மீதான குறைகளை மட்டுமே கூறிக்
கொண்டிருக்கிறார்.'

என இருவரும் எழுதுவதும் என்மீது குறைகாண்பதுதானே!ளூ எனது கருத்துகளிலும் செயல்பாட்டிலும் 'பிழை'யுள்ளதாய்த்தானே சொல்கிறார்கள்! நான் செய்வது 'பிழை'யென்றால்,

இவர்கள் என்னில் 'பிழை கண்டுபிடிப்பது' மட்டும் எப்படிச் சரியாகும்?!

பிழைகளை – குறைபாடுகளை யாரும் சுட்டிக் காட்டுவது தவறல்லளூ வளர்ச்சிக்கு அது மிக அவசியமானதொன்றாகும். கலை, இலக்கியப் படைப்புகள் செம்மையானவையாய் - பிசிறல்கள் அற்றவையாய் - 'முழுமைத்தன்மை' கொண்டிருக்கவேண்டுமென்பது எதிர்பார்க்கப்படுகிறது. கல்லில் சிலை வடிக்கும் சிற்பி, தேவையற்றவைகளை நீக்கிச் செம்மைப்படுத்துவதன் ;மூலமே சரியான சிற்பத்தைக் கண்டடைகிறான். இதற்கு படைப்புத் திறனும், விழிப்புணர்வும் தேவைளூ இல்லையாயின் 'மூளி'யான ஒன்றுதான் 'படைப்பு' என்ற பெயரில் வெளிவரும். இலக்கியத்தில் மொழி முக்கிய கருவிளூ கருவி கூர்மையானதாய் - செம்மையானதாய் இருத்தல் அடிப்படையானதுளூ கருத்துகளின் தெளிவு, வடிவச்செம்மை என்பனவும் அவ்வாறனவையே. தவறுகள், பிசிறல்கள் என்பவற்றை அடையாளங்கண்டு நீக்குவதற்கும் கூர்மையான பார்வையும் அறிவும் தேவை.

தவறுகளை – பிழைகளைச் சுட்டிக்காட்டுவதைக் குறையாகக் காண்பது, மீண்டும் 'செப்பமில்லாத'வற்றையே பெருகச் செய்வதாகும்;ளூ இவர்கள் இருவரதும் வலைப்பூக்களிலும், 'மறுபாதி' இதழ்களிலுமிருந்து உதாரணங்கள் பலவற்றைத் தர இயலும். கருத்துப்பிழைகள், மொழிநடைத் தவறுகள், எழுத்துப் பிழைகள் என அவை 'சிரிப்பூட்டுகின்றன!'

அ) ஒவ்வொரு 'மறுபாதி' இதழிலும் ஆசிரியர் : சித்தாந்தன் என்றும், இணை ஆசிரியர் :

சி. ரமேஷ், அ. கேதீஸ்வரன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிரியர் என்று ஒருவரைக் குறிப்பிட்டபின், இணை ஆசிரியர் என்;று வேறு யாரையும் எப்படிக் குறிப்பிட முடியும்? எல்லோருமே ஆசிரியரென்றால், 'ஆசிரியர் குழு'வெனக் குறிப்பிடலாமே!

'துணை ஆசிரியர்' எனக் குறிப்பிடவேண்டியதைத்தான் 'இணை ஆசிரியர்' என அவர்களுக்கேயுரிய ' மொழித் திறமை'யுடன் தந்துள்ளனர்! இவ்வாறானவற்றைச் சுட்டிக்காட்டுவதாலேதான், 'பிழைகளைக் கண்டுபிடித்து இலக்கியம் நடாத்தும் சிறு பொறிமுறை' எனக் குற்றஞ்சாட்டுகின்றனரோ!

ஆ) 'தொலைவில் ஒரு வீடு' 'பத்தி'யில் ('மறுபாதி' – 5), என்னால் மொழியாக்கம் செய்யப்பட்ட அன்னா அக்மதோவாவின் கவிதையொன்றையும், அதன் ஆங்கில வடிவமொன்றை யும் ( ஆங்கில மொழியாக்கங்கள் பல உண்டென்பதும், நான் எடுத்துக்கொண்டது பிறிதொரு
மொழியாக்கம் என்பதும் இங்கு குறிக்கத்தக்கது.) பத்தியாளர் தந்துள்ளார்ளூ தமிழில் ஒரு வரி
அவரால் பிழையாகத் தரப்பட்டுள்ளது. ர்ந ளயனை வழ அந என்பதற்குரிய மொழியாக்கமாக
' அவனுக்குச் சொன்னான்ளூ' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 'எளிமையான' ஆங்கில வரியை இவ்வாறு பிழையாக யாரும் மொழிபெயர்ப்பார்களா என்ற 'எளிமையான' சந்தேகம், 'மறுபாதி' ஆசிரியர் சித்தாந்தனுக்கோ துணை ஆசிரியர் இருவருக்குமோ வரவில்லை!ளூ வந்திருந்தால், பத்தியாளர் கவிதையின் கீழே குறிப்பிட்டுள்ள 'பனிமழை' நூலை எடுத்து ஒப்பிட்டுப் பார்க்கும் போது, 'அவன் எனக்குச் சொன்னான்ளூ' என்று சரியாக இருப்பதைக் கண்டிருக்கலாம்;ளூ பிரதியைத்
'திருத்தி'யிருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாதது இவர்களின் 'மந்தத்தனத்தை'யல்லவா
காட்டிவிடுகிறது!

குறித்த 'மறுபாதி' இதழ் பற்றிய கூட்டமொன்றில் விமர்சன உரையாற்றிய ஐ. சாந்தன்,

'....இன்னும் உறுத்துவது என்னவெனில் இரண்டாம் ளவயணெய வின் முதலாவது வரி யேசுராசாவின் மொழிபெயர்ப்பில் படு அபத்தமாகத் தரப்பட்டுள்ளமை.' எனக் குறிப்பிட்டுள்ளார். சாந்தனுக்கும் சந்தேகம் வரவில்லையென்பதும், 'பனிமழை'யை அவரும்; ஒப்பிட்டுப் பார்க்க முயலவில்லையென்பதும்தான் உண்மையில் 'இன்னும் படு அபத்தமாக' இருக்கிறது!

2.) ஒரு மேற்கோள் வரியைச் சரியாகத் தரவும் 'மறுபாதி' ஆசிரியருக்குத் தெரியவில்லையே!
'வாசிப்பு சந்தோசத்தையும் நிறைவையுந்;தான் தரவேண்டும்' என பயணியின் கடிதத்தில் உள்ளதாக எழுதுகிறார்ளூ ஆனால் பயணியின் கடிதத்தில், 'அந்த வாசிப்பு சந்தோஷத்தையும் - நிறைவையும் தரத்தான் வேண்டும்' என்றே இருக்கிறது!

தட்டையான வாசிப்புக்குப் பதிலாக பன்முக அர்த்தங்களைக் கண்டுபிடிக்கும் வாசிப்பு
முறையின் அவசியத்தை அழுத்துபவர் சித்தாந்தன்.

'ஒரு படைப்பு அனுபவத்தொற்றுதலை ஏற்படுத்தமுடியுமே தவிர சந்தோசத்தை கட்டாயம் தரத்தான் வேண்டும் என்பது எந்தவகையில் பொருத்தமாக அமையமுடியும். அனுபவத் தொற்றலால் நிகழ்வது சந்தோசமாகவோ துக்கமாகவோ எதுவாகவும் அமையலாம். ஆகவே படைப்பின்மூலம் பெறப்படுவது அனுபவம் என்ற பொதுமைதான் அதற்குப் பொருத்தமாக அமையும். அதைவிடுத்து ;சந்தோசத்தை மட்டுந்தான் ;தரவேண்டும் என அழுத்திக் கூறுவது யேசுராசா போன்ற பரந்த வாசிப்பு அனுபவமுடையவர்களுக்கு பொருத்தமாக அமையாது...'

என, அவர் குறிப்பிடும்போது, 'தட்டையான வாசிப்பையே' அவரும் செய்திருப்பதைக் காணமுடிகிறது!

ஒரு நல்ல படைப்பு முதலில்; ஒரு விடயம்பற்றி புதிதான - விசேட புரிதலை வாசகனில் ஏற்படுத்துகிறது ளூ செம்மையான கலைக்கூறுகளும் இணைந்திருக்கும்போது இரண்டும் சேர்ந்து சந்தோஷத்தையும் ஏற்படுத்துகிறது. துக்கமானதொரு விடயத்தைக்கொண்ட ஒரு படைப்பு சந்தோஷத்தைத் தருவது இவ்வாறுதான்!ளூ சந்தோஷமான விடயம் சந்தோஷத்தையும், துக்கமான விடயம் துக்கத்தை மட்டுமே தரும் என்றில்லை. 'கசந்த புன்னகை' என்பதையோ 'இனிய பாடல் சோகமுடையது'என்ற வரியையோ, 'மறுபாதி' ஆசிரியர் அறிந்திருக்கவில்லைப்போலும்! சில வருடங்களின் முன், கொழும்பில் நடைபெற்ற 'அரச இலக்கிய விழா'வில்- சமூகச்சிக்கல்களைத் தனது படைப்புகளில் கலைத்துவத்துடன் கையாளும் - புகழ்பெற்ற கன்னட எழுத்தாளரான யு. ஆர். அனந்தமூர்த்தி, தனது உரையின் ஆரம்பப் பகுதியிலேயே, 'ஓர் இலக்கியப் படைப்பு முதலில் ஆனந்தத்தைத் தரவேண்டும்' என்று குறிப்பிட்டதையும் அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்

3.) புரியாத கவிதைகள் பற்றிக் குறிப்பிடுகையில், பகுதியாக விளங்கினாலும் முழுமையாகப் பார்க்கையில் மயக்கம் தருவதைக் குறையாகச் சுட்டிக்காட்டியிருந்தேன். அதற்கு, '...முழுமையாகப் புரிதல் என்பது சாத்தியமான ஒன்றா? ஒரு மனிதனை விளங்கிக் கொள்ளுதல் என்பதிலிருந்து உலகத்தை விளங்கிக் கொள்வது வரை பகுதி பகுதியாக நிகழ்வதுதான். இவ்வாறுதான் ஒரு படைப்புப் பற்றிய புரிதலும் இருக்கமுடியும்...'

என்கிறார் சித்தாந்தன். ஒரு சிறிய கவிதையைப் புரிவதிலுள்ள பிரச்சினையை, ஒரு மனிதனைப் புரிவதனுடனும் உலகத்தைப் புரிவதனுடனும் சமப்படுத்தும் இவரது தர்க்கம் 'புல்லரிக்க' வைக்கிறது!

4.) 'ஒன்றின் பின் ஒன்றாக இணைக்கப்பட்ட கடிதங்கள், அட்டவணைகள், கேள்வித்தாள் என்பனவாக வரும் 'படைப்புகளில்' இப்பலவீனங்களைக் காணமுடிகிறது. நாளேடுகளில் வரும் குறிப்பிட்ட விடயத்தை மையப்படுத்திய வௌ;வேறு செய்தி நறுக்குகளை ஒன்றின் பின் ஒன்றாக இணைத்து, நூற்றுக்கணக்கான 'படைப்புகளை' யாரும் தயாரிக்க முடியும்ளூ இவற்றுக்கு அனுபவத்தாக்கம் தேவையில்லைத்தான்!'

என்ற எனது 'பொதுவான' குறிப்பை, '...பயணியின் மேற்படி கருத்து இராகவனின் சிறுகதைகளை முன்வைத்தே குறிப்பிடப்படுகின்றது என்பது வெளிப்படை.' என்கிறார் சித்தாந்தன். தொப்பி அளவானால் அதை இராகவனின் தலையில் அவர் போடலாம்;ளூ ஆனால் அது ';பெருவெளி' சிறுகதைகளுக்கும், சில தமிழக இதழ்களின் கதைகளுக்கும், சிவாஜி கணேசனின் 'பார் மகளே பார்' படத்தின், 'அவள் பறந்து போனாளே...' பாடல் பாணிக் கதையான 'ஒளவை தரு முகிலி' கதைக்கும் பொருந்தும்!

5.) 'படைப்பாளி சொற்களை உருவாக்குகின்றான். புதிய அர்த்தங்களைக் கண்டடைகின்றான்.
இது ஒன்றும் தவறானதல்ல. வாசகனும் தன்னை அதற்குத் தயார்ப்படுத்த வேண்டிய
தேவையுமிருக்கின்றது.' நல்லது சித்தாந்தன்ளூ பொருத்தமான புதிய சொற்களை வரவேற்கலாம்தான்.

ஆனால், 'மறுபாதி'யில் 'இணை ஆசிரியர்' என்று எழுதும்போது 'துணை ஆசிரியர்' என்றும் -

'மறுபாதி'யின் இணை ஆசிரியர்(!) 'மகரந்தச் செயற்;;கை' என்று எழுதும்போது 'மகரந்தச் சேர்க்கை' என்றும் -

வாசகன் 'அர்த்தங்களைக் கண்டடைவது' எப்படி என்பதுதான் புரியமாட்டேனென்கிறது!
மேலும், புதிய சொற்கள் உருவாக்கப்படுவதில் அக்கறை காட்டும் தாங்கள், 'கலைமுகம்' இதழில் எழுதிவந்த 'பத்தி'க்கு புதியதான ஒரு பெயரை வைப்பதற்கு ஏன் அக்கறை காட்டவில்லை?! ளூ 'நடை வழிக் குறிப்புகள்' என்ற அதே தலைப்பில் 'புதிய பார்வை' இதழில் - பல வருடங்களின் முன்னரே - சி. மோகன் 'பத்தி' எழுதினாரென்பதும், பின்னர் நூல் வடிவில் அது வந்துள்ளதென்பதும் தங்களுக்குத் தெரியாமற்போய்விட்டதா அல்லது 'கள்ள மறதி'யா?

6.) 'பயணி என்னும் யேசுராசா இலக்கிய உலகில் தொலைந்துபோய் பல வருடங்களாகிவிட்டன. அதற்குச் சாட்சியாக அவர் 'காலம்' என்னும் சஞ்சிகையில் எழுதிய கவிதையே அவரை வெட்கப்படவைத்துவிட்டது.' இவை, 'கேதீஸ்' என்ற

அ. கேதீஸ்வரனின் பின்னூட்டத்திலுள்ள வரிகள்.

மெத்தச் சரி! நான் இலக்கிய உலகில் தொலைந்துபோய்விட்டேன் என்பதையும், இவர்
'வானத்துச் சூரியனாய்' பிரகாசித்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் - 'நகைச்சுவை உணர்வு உடல்நலனுக்கு நல்லது' என்ற வகையில் - ஏற்கிறேன்!

'காலம்' இதழில் எழுதிய கவிதைக்காக இவர் முன், எப்போதாவது நான் வெட்கப்பட்டேனா என்ன? ளூ சுகமான பகற்கனவொன்று கண்டு மகிழ்ந்தார் போலும்!
தவிர, நான் ஏன் வெட்கப்படவேண்டும்?

'மகரந்தச் செயற்கை' என்று எழுதிக்கொண்டும், ஒருமை பன்மையைக்கூட சரியாக எழுதத் தெரியாமலும் 'மறுபாதி' இதழின் 'இணை ஆசிரியராக(!)' இருப்பதற்கு, இவரல்லவா வெட்கப்பட வேண்டும்?

 


பதிவேற்றம் - நவம்பர் 2011
© பதிப்புரிமை உமா வரதராஜன் - 2010
Designed By : HLJ Solutions