கிழக்கிலங்கையின் கரையோரக் கிராமமான பாண்டிருப்பில் பிறந்த இவர் தன் தாத்தா (உடையப்பா), தந்தை (மாணிக்கம்) ஆகியோரின் பெயர்களின் முதல் எழுத்துக்களை இணைத்து உமா வரதராஜன் ஆனார் .
ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவல் பற்றிய விமர்சனக் கட்டுரை மூலம் 1973ல் , தன்னுடைய 17வது வயதில் இலக்கிய உலகுக்கு இவர் அறிமுகமானார் .இக் கட்டுரை தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளரான நா .பார்த்தசாரதி அவர்களின் 'தீபம் 'இலக்கிய இதழில் வெளியானது.
அதைத் தொடர்ந்து சிறுகதை ,கவிதை, விமர்சனம் ,பத்தியெழுத்து ,நாடகப்பிரதி ,நடிப்பு ,தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பு,மேடைப் பேச்சு,நாவல் ஆகிய பிரிவுகளில் கடந்த பல வருடங்களாக இயங்கி
வருபவர் .
1988-89ல் வெளியான சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான சாகித்திய மண்டலப் பரிசையும் ,விருதையும் வடக்கு - கிழக்கு மாகாண கல்வி ,கலாசார அலுவல்கள் ,விளையாட்டுத் துறை இவருக்கு வழங்கியுள்ளது .
தமிழிலக்கியத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணியைப் பாராட்டி இந்து சமய ,கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சு, 'தமிழ் சாகித்திய விழா -1993 ன் போது, கொழும்பில் 'தமிழ் மணி ' பட்டம் வழங்கி கௌரவித்தது .
< /p>
2002 ல் இஸ்லாமிய ஆய்வு மையமும் ,ஸ்ரீலங்காவுக்கான தென் கிழக்கு ஆய்வமைப்பும் இலக்கியத் துறைக்கான விருதை வழங்கியது .
அயலகத்தில் வெளியான சில தொகுப்புகளில் இவருடைய படைப்புகள் சேர்த்துக் கொள்ளப் பட்டிருக்கின்றன .( மாலை சூட்டிகள் -இந்திய சாகித்திய அகாடமி வெளியீடான 'அயலகத் தமிழ் இலக்கியம் '(2004) :தொகுப்பாளர் :சா .கந்தசாமி , அரசனின் வருகை -டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடான '100 சிறந்த சிறுகதைகள் '(2014) : தொகுப்பாளர் :எஸ் .ராமகிருஷ்ணன் , அரசனின் வருகை -இந்திய சாகித்திய அகாதமி வெளியீடான 'கண்களுக்கு அப்பால் இதயத்துக்கு அருகில் '.தொகுப்பாளர் :மாலன்).
இவரது சில படைப்புகள் ஆங்கிலம் ,ஜேர்மன் ,சிங்கள மொழிகளில் பெயர்க்கப் பட்டுள்ளன.
மேலும் வாசிக்க